மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.