அடுத்த 3 மணிநேரம்... இந்த 5 மாவட்டங்கள் தான் ஸ்பாட்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்

Published : Mar 20, 2026, 08:36 AM IST

Rain: கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியது.

PREV
15
தமிழகத்தை குளிர வைத்த கோடை மழை

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் மும்முறை பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்நிலையில் இன்று மற்றும் நாளை வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

35
இன்று இடி மின்னலுடன் மழை

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
5 மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (காலை 10 மணிவரை) 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories