இந்த புயல் வருகின்ற 30ம்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இன்று தென்மாவட்டங்களின் அனேக பகுதிகளிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். மேலும் புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.