Cool Suresh Tears into Sengottaiyan : ஓட்டு கேட்கும் போது சின்ன வீடு பெரிய வீடு என்று ஏறி இறங்கி கேட்குறீங்க ஆனால், ராஜினாமா செய்யும் போது மட்டும் ஏன் மக்களிடம் கேட்கவில்லை என்று நடிகர் கூல் சுரேஷ் செங்கோட்டையனை கிழி கிழி என்று கிழித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் நேற்று தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இன்று தனது ஆதரவாளர்களுடன் தளபதி விஜய் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது:
26
2026ல் இளைஞர்களின் எழுச்சியால் ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் தூய்மையான மற்றும் புனிதமான ஆட்சி அமைய வேண்டும். 2026ல் இளைஞர்களின் எழுச்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படும். தூய்மையான ஆட்சி அமைய வேண்டும். நேர்மையான, தூய்மையான ஆட்சியை நடத்த ஒருவர் தேவை என மக்கள் நினைக்கின்றனர். திமுக, அதிமுக இரண்டுமே ஒன்று தான். இரண்டும் இணைந்து தான் பயணிக்கின்றன. இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. 3வது கட்சி வேண்டும்.
36
விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்
பள்ளி குழந்தைகள் கூட தங்களது பெற்றோரிடம், விஜய்க்கு ஓட்டு அளியுங்கள் என்று கூறும் நிலை தான் தமிழகத்தில் தற்போது உள்ளது. தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல. புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.எங்கள் கட்சியில் சேர வேண்டும் என திமுகவோ, மாற்று கட்சியோ, பாஜகவோ என்னை அணுகவில்லை. தெளிவான முடிவை எடுத்து தான் தவெகவில் இணைந்துள்ளேன்.
46
ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது?
மேலும் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது என தவெக சொல்லவில்லை. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எம்ஜிஆர்ஆல் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்து அடையாளம் காணப்பட்டவன். எம்ஜிஆர் பாராட்டும் அளவுக்கு பணி செய்தவன் நான். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். விஜய்யின் கட்சிக்கு மக்கள் மனதில் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
56
செங்கோட்டையன் எப்படி மக்களிடம் கூறாமல் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியும்
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஓட்டு வாங்கி எம் எல் ஏவான செங்கோட்டையன் எப்படி மக்களிடம் கூறாமல் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியும் என்று நடிகரும், அரசியலை விமர்சிப்பவருமான கூல் சுரேஷ் ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் சாருக்கு வாழ்த்துக்கள். விஜய் சாருக்கும் வாழ்த்துக்கள்.
66
ஓட்டு கேட்கும் போது மக்களாகிய நாங்கள் தேவை
ஆனால், ஓட்டு கேட்கும் போது மக்களாகிய நாங்கள் தேவை. வீடு வீடாக, மாடி மாடியாக, டீ கடை, பஸ் ஸ்டாண்ட், சின்ன வீடு, பெரிய வீடு என்று ஏறி இறங்கி மக்களிடம் ஓட்டு கேட்டீங்களே, இப்போது ராஜீனாமா பண்ணும் போது மட்டும் ஏன் கேட்கல, நான் இந்த மாதிரி ராஜினாமா செய்ய போகிறேன் என்று ஏன் கேட்கவில்லை. நீங்கள் உங்களது இஷ்டத்திற்கு முடிவு எடுக்கும் போது அப்போது நாங்கள் செலுத்திய ஓட்டிற்கு என்ன மதிப்பு இருக்கிறது என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.