தவெக துண்டை தோளில் போட்ட ஆதவ்..! சட்டென டென்ஷன் ஆன செங்கோட்டையன்..! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!

Published : Nov 27, 2025, 04:11 PM IST

Sengottaiyan Rejects TVK Shawl | Aadhav Arjuna | Viral Video: தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தவெக துண்டை தோளில் போட்டபோது செங்கோட்டையன் மறுத்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.

PREV
14
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம் வாயந்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார். 

கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு தவெகவில் நிர்வாக குழு ஒருங்கினைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

24
விஜய் நம்பிக்கை

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த செங்கோட்டையனின் அரசியல் அனுபவம், களப்பணி தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார். 

தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ''தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே தேவை என்ற நிலை இருக்கக் கூடாது.

விஜய்க்கு மக்கள் ஆதரவு

3வதாக ஒரு கட்சி வேண்டும். பள்ளி குழந்தைகள் கூட விஜய்க்கு வாக்களியுங்கள் என்ற நிலை உள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நேர்மையான, தூய்மையான ஆட்சியை நடத்த ஒருவர் தேவை என மக்கள் நினைக்கின்றனர். 

தவெகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. அதனால் தான் தவெகவில் இணைந்தேன். விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

34
தவெக துண்டை போட மறுத்த செங்கோட்டையன்

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தவெக துண்டை தோளில் போட்டபோது செங்கோட்டையன் மறுத்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன, அதாவது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

செங்கோட்டையனுக்கு என்ன தயக்கம்?

அப்போது தவெக துண்டை நிர்வாகிகளிடம் கேட்டு வாங்கிய ஆதவ் அர்ஜுனா, அதனை செங்கோட்டையன் தோளில் போட்டார். அப்போது துண்டை எடுத்த செங்கோட்டையன் இப்போது வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்தார். ஒரு கட்சியில் இணைந்த பிறகு அந்த கட்சியின் துண்டை போடுவதில் செங்கோட்டையனுக்கு என்ன தயக்கம்? என ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

44
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே

அதே வேளையில் மற்றொரு சிலர், ''செங்கோட்டையன் அரசியலில் அனுபவம்வாய்ந்தவர். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பது அவருக்கு தெரியும். அரசியலிலும், வயதிலும் குறைவான ஆதவ் அர்ஜுனா அவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா?'' என கூறி வருகின்றனர். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே. இந்த வண்டி எப்படி ஓடப்போகிறது என்பதை பார்ப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories