மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். காலை 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
27
தர்பூசணி சாப்பிட அறிவுறுத்தல்
கோடை வெப்பத்தை தணிக்க தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், இளநீர், முலாம்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு உடல் சூட்டை தணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கோவை, கரூர் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
37
காற்றழுத்த தாழ்வு பாதை
சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு விதர்பா முதல் தென் தமிழகம் வரை, மராத்வாடா மற்றும் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்தில், குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவுக்கூடும் என தெரிவித்துள்ளது.
57
லேசானது முதல் மிதமான மழை
ஏப்ரல் 01 மற்றும் 02 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஏப்ரல் 03 தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 04 மற்றும் 05 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
67
வெப்பநிலை அதிகரிக்கும்
இன்று முதல் ஏப்ரல் 03 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயலப்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
77
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.