அப்பாடா... 100 டிகிரி கொளுத்து வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. குளு குளு அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?

Published : Mar 10, 2026, 08:38 AM IST

கூட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே குளு குளு அப்டேட் ஒன்றை வெளியாகியுள்ளது. தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

PREV
15
சுட்எடரிக்கும் வெயிலால் அவதி

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். வேலூர், கரூர், ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து குடையை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

25
இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும்

கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளநீர் கடைகளுக்கு சென்று வாகன ஓட்டிகள் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது. எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

35
குளு குளு அப்டேட்

இந்நிலையில் கூட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே சென்னை வானிலை மையம் குளு குளு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

45
தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

அதேபோல் நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் மார்ச் 12ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories