அடுத்த 3 மணிநேரம்! 12 மாவட்டங்களில் போட்டு தாக்கப்போகுதாம் மழை! வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!

Published : Oct 07, 2025, 09:03 AM IST

TN Weatherman: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

PREV
14
தமிழகத்தில் பரவலாக மழை

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

34
அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

44
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன்

இதனிடையே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: காவிரி டெல்டா மவாட்டங்களில் பரவலாக இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம்ம் , கொரடாச்சேரி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை சுற்றுவட்டாரங்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்து, தலைஞாயிறு, தகட்டூர், கோடியக்கரை சுற்றுவட்டாரங்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, குத்தாலம், கும்பகோணம், நாச்சியார்கோவில் சுற்றுவட்டாரங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories