இரவு முழுவதும் பரவலாக பெய்த தொடர் மழை மற்றும் இன்று கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று மெதுவாக வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தொடர்ந்து வருகின்ற 22ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை முதல் வருகின்ற 23ம் தேதி வரை ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
33
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இனிடையே இரவு முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.