தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
24
Education Management Information System
இதன் காரணமாக மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்கள் கற்பிக்க முடியாமல் EMIS தரவுகள் பதிவு செய்வதிலையே காலம் முழுவதும் விரயம் ஆவதாக புலம்பி வந்தனர். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் (டிட்டோஜாக்) தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை குஷியான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது EMIS பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டதால் குஷியில் துள்ளி குதிக்கின்றனர். இந்த நடைமுறை மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44
EMIS burden reduction
இனி மாணவர்கள் விபரம், மாணவர்களின் கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை, ஆசிரியர் பாட விபர பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள், மாணவர்களின் உடல் நலன் சார்ந்த விபரங்களை பதிவேற்றம் செய்ய தேவையில்லை.