வீட்டு மனைகள் வாங்கியவர்கள் பட்டா பெற சூப்பர் சான்ஸ்.! தேதி குறித்த தமிழக அரசு

Published : Mar 05, 2025, 01:28 PM IST

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

PREV
14
வீட்டு மனைகள் வாங்கியவர்கள் பட்டா பெற சூப்பர் சான்ஸ்.! தேதி குறித்த தமிழக அரசு

ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களை பல வருடங்களாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த இடங்களுக்கு உரிய வகையில் பட்டா கிடைக்காமல் தவித்து வருகிறார்கள், இதனையடுத்து தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் 57,084 பேருக்கும் பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

24
வீடுகளுக்கு விற்பனை பத்திரம்

இதே போல தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்தவகையில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு வாரிய விதிமுறைகளின்படி விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

34
பட்டா பெற சிறப்பு முகாம்

அதில்  வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை  சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டம் (MUDP) மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சித்திட்டத்தில் (TNUDP) மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காகவும்

44
தேதி குறித்த தமிழக அரசு

வருவாய்த்துறையுடன் இணைந்து 01.03.2025 முதல் 08.03.2025 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமர்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாஎ அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  முகாம் நடைபெறும் நாள் மற்றும் திட்டப்பகுதிகளின் https://tnuhdb.tn.gov.in இணையதள முகவரியில் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories