2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் மாறுமா? விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடு பறக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி எங்கே செல்லும், எந்த கட்சிக்கு எவ்வளவு சீட், திமுக கூட்டணி உடையுமா.? அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள் எது என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முதலில் பார்க்கலாம்.
25
அதிமுக- திமுக கூட்டணி .?
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதே போல சீமான் தனி அணியாகவும், கமல்ஹாசன், சரத்குமார்,எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் தேர்தல் களத்தில் இறங்கியது. தேமுதிக தனி அணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
35
கூட்டணி மாறும் கட்சிகள்
இந்த தேர்தலில் தனியாக களம் கண்ட நாம் தமிழர், கமல், சரத்குமார் மற்றும் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி அப்படியே நீடித்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக மற்றும் பாமக தனி அணியாக உருவெடுத்து போட்டியிட்டது. இதிலும் அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 40 இடங்களை கைப்பற்றியது.
45
அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த விஜய்
இந்த நிலையில் தான் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசியல் களத்தில் புதிதாக கால் பதித்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய், அதிமுகவோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்வாரா என்ற பேச்சு எழுந்தது.
ஆனால் விஜய்யின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தவெக தனித்து தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுக தலைமை ஷாக் அடைந்துள்ளது. தவெகவோடு தேர்தலை இணைந்து எதிர்கொண்டால் வெற்றி பெறலாம் என திட்டமிட்ட நிலையில் விஜய்யின் இந்த முடிவால் குழப்பத்தில் உள்ளனர்.
55
2026 அதிமுக கூட்டணி என்ன.?
அதே நேரத்தில் பாஜகவோடு எப்போதும் கூட்டணி இல்லையென அறிவித்திருந்த அதிமுக தற்போது தனது கருத்தை மெதுவாக பின்வாங்கி வருகிறது. பாஜகவோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் தங்களுக்கு ஒரே எதிரி திமுக என எடப்பாடி மற்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளனர்.
எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் தவெக அணிக்கு பல்டி அடிக்குமா.? என்பதை காலம் தான் பதில் சொல்லும்