மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும். இந்நிலையில் 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியுடன் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. அதில் திமுக சார்பில் எம்.பி. வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா பதவிக்காலமும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.