Vegetables : கிடு, கிடுவென உயர்ந்த தக்காளி விலை குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published May 31, 2024, 8:13 AM IST

அண்டை மாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை சரமாரியாக உயர்ந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.

பீன்ஸ் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை!
 

அவரைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos


Vegetable

இஞ்சி விலை என்ன.?

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் 35 ரூபாய்க்கும், கோவக்காய் 35 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!

vegetable price hike

சுரைக்காய் விலை நிலவரம்

மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கொத்தமல்லி ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

click me!