இளம் தலைமுறை நவீன வாழ்க்கை
நவ நாகரிக உலகில் எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மொபைல் போனில் வரும் வீடியோக்கள் தான் சற்று பொழுது போக்காக உள்ளது. சிலர் மொபைல் போன் மூலம் தங்களது திறமைகளை காட்டி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகியவர்களும் உண்டு, அதே விடியோவால் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றவர்களும் உள்ளனர்.
tik tok surya
ஆபாச சாட்டிங்
மற்றோரு தரப்பிலோ அறைகுறை ஆடைகளோடு இளைஞர்களை சூடேற்றி லைக்ஸ்களை குவித்தும் சம்பாதித்து வருகின்றனர். முன்பு காதலியை சந்திக்க காத்திருந்து காதல் கடிதம் கொடுத்த காலம் மலையேறிவிட்டது.
ஒன் நைட் ஸ்டாண்ட்
இன்ஸ்டாவில் சந்தித்த அடுத்த நொடி டேட்டிங் என தற்போது நவீன காலமாக மாறிவிட்டது. லிவிங் டூ கெதர் என்ற காலம் கடந்து ஒன் நைட் ஸ்டே என்ற நிலைக்கு இன்றைய தலைமுறை வந்துவிட்டது.இதில் அடுத்தகட்டமாக டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இளம்பெண் இன்ஸ்டாவில் விளம்பரம் செய்து இளைஞர்களை சூடேற்றிய சம்பவம் பரபரபாகியுள்ளது.
டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ்
அந்த வகையில் டெல்லியை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சில்லான காபி குடிக்க 1500 ரூபாயும், திரைப்படத்திற்கு சென்று விட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு 2000 ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளார். குடும்பத்தினை சந்தித்து பேசுவதற்கு 3 ஆயிரம் ரூபாய் என ரேட் பிக்ஸ் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பை ரைடு செல்ல 4ஆயிரம்
அடுத்ததாக பைக்கில் நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு 4ஆயிரம் ரூபாயும் எனவும் இதில் கூடுதலாக கையை பிடித்துக்கொள்ளலாம் என கூடுதல் சலுகை அறிவித்துள்ளார். அடுத்ததாக டேட்டிங் சென்றதை சமூக வலைதளத்தில் போட்டோவாக பதிவிடுவதற்கு 6000 ரூபாய் என ரேட் நிர்ணயித்துள்ளார்.
ஒன்றாக சமைத்து சாப்பிட 3500
இதில் அடுத்த கட்டமாக வீட்டில் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு 3500 ரூபாயும், வெளியில் ஷாப்பிங் செல்வதற்கு 4,500 சாகச பயணம் செல்வதற்கு 5ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார். வார விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வெளியூர் சுற்றுலா செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் விலை நிர்ணயித்து அட்டவணை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்துள்ளார் அந்த இளம்பெண்.
TTF Vasan Arrest: மீண்டும் கைதான யூடியூபர் டிடிஎப்.வாசன்.. இந்த முறை எந்த வழக்கில் தெரியுமா?
அச்சமடையும் பெற்றோர்
இந்த இன்ஸ்டா வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவிற்கு கீழே அந்த இளம்பெண்ணை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இன்றைய இளைய சமுதாயம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.