Amit Shah : புதுக்கோட்டை.. ராஜராஜேஸ்வரி அன்னையை வழிபட்டேன் - மகிழ்ச்சியோடு போட்டோக்களை வெளியிட்ட அமித்ஷா!

First Published | May 30, 2024, 11:25 PM IST

Amit Shah : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இன்று புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். 

Amit Shah

பிரதமர் மோடி அவர்கள் இரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் தமிழகம் வந்துள்ளார்.

Union Minister

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில் "தமிழகத்தின் புதுக்கோட்டை சத்தியகிரீஸ்வரர் கோவிலில் ராஜராஜேஸ்வரி அன்னையை வழிபட்டேன்"

Tap to resize

Minister Amit Shah

"தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நான் ஏப்ரல் மாதம் 12ம் தேதி செல்ல திட்டமிட்டிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது". "எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்" என்று கூறியுள்ளார்.

Pudukkottai

கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஜூன் மாதம் 1ம் தேதியுடன் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யாருக்கு என்ன பலம்?

Latest Videos

click me!