Weekends Special Buses
வார இறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாகவும், வார விடுமுறையை முன்னிட்டும் போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu State Transport Corporation
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: டிசம்பர் 27 (வெள்ளிக்கிழமை), 28 (சனிக்கிழமை). 29 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?
Government Bus
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர். சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், 28 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 485 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Arasu Bus
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Transport Department
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
Tamil Nadu government buses
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,603 பயணிகளும் சனிக்கிழமை 5,890 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,000 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.