TTV Dhinakaran
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வழி நடத்தி வந்தார். தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டதால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.
Amma Makkal Munnetra Kazhagam
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதால் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமமுக உருவான போது உடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது யாருமே தினகரனுடன் தற்போது இல்லை. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த போது ஏற்பாடுகளை செய்திருந்த பழனியப்பனும் அண்மையில் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். தற்போது மேல்மட்ட தலைவர்கள் மட்டும் அல்லாமல் அமமுக மாவட்டச் செயலாளர்களும் மறுபடியும் அதிமுக நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படிங்க: Pongal Festival School Holidays: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?
AMMK
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் நாளுடாளுமன்ற தேர்தலில் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெற்றாமல் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி தாய் கழகமான அதிமுகவிலும் மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
Kingsley Jerald
இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சியில் இணைந்த கிங்ஸ்லி ஜெரால்டை பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் அமமுக மாவட்ட பொறுப்பாளர்கள் தவெகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.