பாலியல் வன்கொடுமை.! நடந்தது என்ன.? வெளியான கல்லூரி மாணவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Published : Dec 26, 2024, 11:22 AM ISTUpdated : Dec 26, 2024, 11:48 AM IST

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவி அளித்த வாக்குமூலத்தில் நடந்தது என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

PREV
15
பாலியல் வன்கொடுமை.! நடந்தது என்ன.? வெளியான கல்லூரி மாணவியின் அதிர்ச்சி வாக்குமூலம்
anna university

அண்ணா பல்கலைக்கழகம்- அதிர்ச்சி சம்பவம்

அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற போது நடந்தது என்ன என மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தனது காதலனோடு இரவு  S & H Building பின்புறம் உள்ள தூண் அருகில் அமர்ந்து கொண்டு பேசி கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
 

25
sexual assault case

மாணவிக்கு பாலியல் தொல்லை

அப்போது  ஓர் நபர் வந்து எங்களிடம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்ததை  நான் வீடியோ எடுத்தேன் என்று கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அவனிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தோம். அவன் எங்களிடம் அந்த building உள்ளே staff இருக்காங்க என்று கூறி நான் இந்த வீடியோவை dean மற்றும் Staff காண்பித்து உங்கள் TC-யை தர வைப்பேன் என்று மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து  நான் சொல்றதை கேட்டால் உங்களை நான் காப்பாத்துவேன் என்றான். அதன்பின் அவன் தனது காதலனையும், தன்னையும் தனியாக பிரித்து நிற்க வைத்ததாகவும்,

35
sexual assault

வீடியோ எடுத்து மிரட்டிய நபர்

அதன் பின் தனது காதலனை அங்கிருந்து அழைத்து சென்று ஓரிடத்தில் நிற்கவைத்த பின்னர் மீண்டும் தன்னிடம் வந்து ஆசிரியர்களின் விட்டு விட்டதாகவும், அவர்கள் அவனை விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார் . அடுத்த சில நிமிடங்களில்  நீ என்னுடன் வா நான் உன்னை காப்பாத்துகிறேன் என்று அந்த நபர் கூறியதாகவும், இதனால்  அவனுடன் தானும் நடந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

அப்போதும் மீண்டும் மீண்டும் அவனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதாக தெரிவித்துள்ளார். அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கட்டிடம் அருகே அழைத்து சென்று உன்னை விட வேண்டும் என்றால் 3 சான்ஸ் தருவதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்

45
chennai anna university protest

யார் அந்த சார்.?

முதலாவதாக வீடியோவை கல்லூரி முதல்வரிடம் காண்பித்து டிசி கொடுக்கவைப்பேன். இரண்டாவது, கொஞ்ச நேரம்  என் கூட ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 3வதாக அந்த சார் கூட கொஞ்சம் நேர இருக்க வேண்டும் என கூறியுள்ளான். இதனையடுத்து அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அடுத்தாக அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நான் கூப்பிடும் போது வர வேண்டும் இல்லையென்றால் உனது தந்தைக்கு வீடியோவை அனுப்பி வைத்து விடுவதாக  மிரட்டி விட்டு சென்றதாக அந்த புகாரில் மாணவி தெரிவித்துள்ளார்.   

55
Anna University crime

போலீசார் விசாரணை

இதனிடையே மாணவியை மிரட்டிய போது அந்த சார் உடன் ஒன்றாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். எனவே யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவியை தனியாக மிரட்டிக்கொண்டிருந்த போது அந்த நபருக்கு போன் வந்ததாகவும், அப்போது மாணவியை மிரட்டிவிட்டு அனுப்பி விடுவதாக போனில் தெரிவித்ததுள்ளதாக மாணவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். எனவே போன் செய்தது யார்.? அந்த சார் யார் என  போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories