Tasmac shop
வருவாயை கொட்டும் மதுபானம்
தமிழகத்தில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயை ஈட்டி வருகிறது. அதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விஷேச நாட்கள் என்றால் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெறும். எனவே வெளிநாட்டிற்கு இணையாக இந்தியாவில் மது குடிப்பது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே மது குடித்த நிலை மாறி தற்போது பெண்களும் போட்டி போட்டு மது குடிக்கும் நிலை உள்ளது.
liquor shops
மதுபான கடைகள்- அட்ஷய பாத்திரம்
மது குடிப்பவர்களை ஒதுக்கி வைத்த காலம் மலையேறி மது குடிக்காதவர்களைத்தான் தற்போது ஒதுக்கி வைக்கும் காலம் வந்து விட்டது. அந்த அளவிற்கு மது விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதி திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில் டாஸ்மாக் அட்ஷய பாத்திரமாக உள்ளது. நிதியை கொட்டிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை செயல்படுகிறது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கணக்கிடும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது.
tasmac bill
மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம்
மேலும் மதுபான பாட்டிலுக்கு அரசு விதித்த கட்டணத்தை விட்ட 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக கள்ளத்தனமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதை டிஜிட்டல் முறையால் தடுக்க முடியும் என கூறப்பட்டது.
tasmac liquor
கள்ளத்தனமாக மது விற்பனை
இதனையடுத்து பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுபான பாட்டிலை பார் கோடு ஸ்கேன் செய்து பில் வழங்கி விற்பனை செய்யும் முயற்சியானது ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டது. அப்போது ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மதுபானத்திற்கு பில் கொடுக்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
tasmac bill
ஜனவரி முதல் பில்
ஆனால் ஒரு சில குறைபாடுகளை சரி செய்ய கால தேவை ஏற்பட்டதால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மதுபானத்திற்கு பில் வழங்கும் திட்டம் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ஜனவரி மாதம் முதல் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் மதுப்பிரியர்கள் வாங்கும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களுக்கும் பில் வழங்கப்படும் என கூறினார்.
tasmac liquor bill
மதுபாட்டில்களுக்கு பில்
இந்த புதிய திட்டத்தின் மூலம் தினமும் விற்கப்படும் மதுபான தரவுகள் உடனடியாக தெரியவரும் எனவும் டாஸ்மாக் கடைகளில் பார்கோடு வசதி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் குடிமகன்கள் மதுபானத்திற்கு உரிய விலையை கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.