மகளிர் சுய உதவி குழுவிற்கு அடித்தது ஜாக்பாட்.! நாளை முதல் சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு

First Published | Dec 26, 2024, 7:52 AM IST

சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற உறுதுணையாக உள்ளது. 

women self help groups

மகளிர் சுய உதவிக்குழு முன்னேற்றம்

சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு. வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். மேலும் சுழல் நிதியின் மூலம் சொந்த தொழில் செய்தும் முன்னேறி வருகின்றனர்.

அந்த வகையில்  சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில,மாவட்ட,  வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

exhibition of products

மகளிர் சொந்த தொழில் - விற்பனை கண்காட்சி

இதுமட்டுமில்லாமல் மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம். மதி சிறுதானிய உணவகம். இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சியால் இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும். விற்பனை செய்யவும் எதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து 'சரஸ்' (SARAS) எனப்படும் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

Tap to resize

women self help groups

பாரம்பரிய பொருட்கள் விற்பனைண- கண்காட்சி

இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி (27.12.2024) நாளை  மாலை 04.00 மணியளவில் சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சி தொடங்கப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியில், ஆந்திரா மாநிலத்தின் அழகிய மரச் சிற்பங்கள். கொண்டப்பள்ளி பொம்மைகள், குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள். பீகார் மாநிலத்தின் மதுபாணி ஓவியங்கள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மகாராஷ்ட்ரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள் உள்ளிட்ட கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

women's self-help group exhibition of products

தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருட்கள்

மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள். திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன். சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி). விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள். கோரைப் பொருட்கள், அலங்கார விளக்கு திரைகள்.

விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள். தேனி சானிடரி நாப்கின், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள். கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

women self-help group

15 நாட்கள் கண்காட்சி

மேலும் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள். கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள். நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள். மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 27ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 09ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் சரஸ் மேளாவில் உணவு அரங்குகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள். இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!