tomato onion
தக்காளி விலை என்ன.?
தக்காளி மற்றும் வெங்காயம் தான் சமையலுக்கு முக்கியமான காய்கறிகளாகும், எந்த வித உணவு சமைத்தாலும் ருசியை கொடுப்பது இந்த காய்கறிகள் தான். அந்த வகையில் தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்தால் இல்லத்தரசிகள் நிலைமை சிரமம் தான். கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த விலையால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுந்தது.
ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டினால் வெங்காயத்தின் விலையானது 80 ரூபாயை தொடும், வெங்காயம் விலை 120 ரூபாயை தொட்டால் தக்காளி விலை 80 ரூபாய்க்கு விற்பனையாகும்.
போட்டி போட்டு உயரும் விலை
போட்டி போட்டு தக்காளி வெங்காயம் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் ஒரு கிலோ அரை கிலோ என்ற அளவில் வாஙகி செல்லும் நிலை உருவானது. மேலும் வீடுகளில் உணவுகளில் தக்காளி வெங்காயத்தை குறைவான அளவை பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது
பெரும்பாலான இடங்களில் தக்காளி சட்னி தயாரிப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது.
மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை
குறைந்த விலையில் கிடைக்க ரயில்களில் டன் கணக்கில் வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பியது. மாநில அரசு பண்ணை பசுமை மையங்களில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்தது. இருந்த போதும் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களுக்கு உரிய வகையில் சென்று சேராமல் உச்சத்திலையே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை இருந்தது. இந்த நிலையில் தான் காரிப் பருவ பயிர்கள் வரத்து மற்றும் மழை பாதிப்பு குறைவின் காரணமாக தக்காளி, வெங்காயத்தின் வரத்து வர தொடங்கியது.
சரிவை சந்தித்த தக்காளி, வெங்காயம்
இதனால் கடந்த ஒரு வாரமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது சரிவை சந்தித்து வருகிறது. இதன் படி 50 ரூபாய்க்கு 3 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயமானது தரத்தை பொறுத்து ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன் படி வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40க்கும்,
Vegetables Price Koyembedu
காய்கறி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price
உருளைக்கிழங்கு விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது.