அடுத்த 6 மாதம் மழைக்காக ஏங்க போகிறோம்.! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த புதிய அப்டேட்

First Published | Dec 26, 2024, 8:33 AM IST

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து வருகிறது. இதனால், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

RAIN CHENNAI

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில்  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழந்து வருகிறது. இதனால் நேற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. 
 

Tamilnadu Rains

சென்னையில் மழை நிலவரம்

இன்று (26-12-2024 மற்றும் 27-12-2024) நாளை  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Tap to resize

heavy rain in tamilnadu

கிறிஸ்துமஸ் தினத்தில் மழை

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் 2001, 2003, 2022 மற்றும் தற்போது நேற்று ( 2024 ) கிறிஸ்துமஸ் தினங்களில் அபூர்வமாக மழை பெய்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 25 வருடங்களில்  கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 முறையாக  மழை பெய்துள்ளதாக கூறினார். மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார், பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய வட கடற்கரை பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். 
 

weatherman alert

மழைக்காக காத்திருக்க போகிறோம்

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவித்தவர்,  இந்த மழையை அனுபவியுங்கள். இனி அடுத்த 6 மாதங்களில் மழைக்காக ஏங்குவோம். எனவே இந்த தாமதமான பருவமழையை கொண்டாடுவோம் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!