Anna University student sexual assault
கல்லூரி பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் தேதி இரவு தனது காதலனோடு பேசிக்கொண்டிருந்த மாணவியை மர்ம நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் திமுக நிர்வாகி என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது என்ன.? என்பது தொடர்பாக காவல்துறையிடம் மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார்.
sexual assault arrest
மாணவியின் வாக்குமூலம்
அந்த வாக்குமூலம் இன்று காலை வெளியானது. அதில் மாணவியின் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் மாணவியிடம் அந்த நபர் பாலியல் வன்கொடுமை மேற்கொண்ட தகவல்களும் கூறப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
chennai anna university sexual assault
பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள்
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பு.
Annamalai And Stalin
கீழ்த்தரமான செயல்
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.