மாநாடு நடந்த இடமே அலங்கோலம்! தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு அவ்வளவுதான்! விஜய்யை ஏடா கூடமாக விமர்சித்த H.ராஜா!

Published : Aug 23, 2025, 11:07 AM IST

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வழங்கிய நிதியை விட மோடி அரசு 3 மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

PREV
14
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா

காங்கிரஸ் - திமுக கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதியையும், திட்டங்களையும் வழங்கியுள்ளது என எச். ராஜா கூறியுள்ளார். திருநெல்வேலியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு எவ்வளவு ஒழுக்கமாகவும், ஒரு குப்பை கூட இல்லாமலும் நடந்தது என்பதை எனது சமூக வலைதளப் பக்கங்களில் படத்துடன் பதிவிட்டுள்ளேன். தேசபக்தர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

24
மதுரை மாநாடு

ஆனால், நேற்று முன்தினம் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் நொறுக்கப்பட்டுள்ளன. மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. ஒரு மாநாடு நடந்த இடத்தையே அலங்கோலப்படுத்தும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாகும்? ஒழுக்கக் கேடான இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிப் போகும். இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

34
விஜய் பாடம் படிக்க வேண்டும்

மீனவர்கள் பிரச்சினை குறித்து நடிகர் விஜய் பேசியதாகக் கூறுகிறீர்கள். அது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு. அவர் இன்னும் விஷயங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு காரணமே, 1974-ல் காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். அது தமிழக மீனவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், கடந்த 11 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மீனவர் மட்டுமே, அதுவும் மீன்பிடி தகராறில் இல்லாமல், கிரிக்கெட் போட்டி தொடர்பான விரோதத்தில் கொல்லப்பட்டார். மற்றபடி ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

44
3 மடங்கு அதிக நிதி

நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்குக் கொடுத்த நிதியை விட, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதியையும், திட்டங்களையும் வழங்கியுள்ளது. மேலும், தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழை வளர்ப்பதற்காக மகாகவி பாரதியாருக்கு இருக்கை அமைத்தவர் பிரதமர் மோடி. ஆனால், மத்தியில் பல ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. தமிழுக்கு என்ன செய்தது? எனவே, தமிழக மக்கள் இதுபோன்ற சினிமா வசனங்களை நம்பி ஏமாற மாட்டார்கள் என விமர்சித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories