சுய உதவி குழுக்களுக்கு சிறு கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து சிறு வியாபாரம் அல்லது சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ள கடன் பெறமுடியும்.
சுய உதவிக்குழுவிற்காக பல்வேறு கடன் உதவி திட்டம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சுய உதவிக்குழவிற்கு உதவிடும் வகையில் சிறு கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதனை படி சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெறமுடியும்.
25
சிறு கடன் திட்டம்
பயனாளி, சிறுபான்மை சுய உதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும்.
எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் / ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ இதர வகுப்பினர் இடம் பெறலாம். குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
35
கடன் உதவி- விண்ணிப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை:
அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் /மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.
அதிகபட்சக் கடன் தொகை (உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திடத்தின் கீழ் ஆண்டிற்கு 7% வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவணைத்தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலமாக அதிகபட்சமாக 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் - 2
இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக உறுப்பினர் ஒருவருக்கு 1.50 லட்சம் வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் ஆண் பயனாளிகளுக்கு ஆண்டிற்கு 10% எனவும் பெண் பயனாளிகளுக்கு 8% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் எனவும், குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
கடன் உதவி பெற தேவையான ஆவணங்கள்
அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள் :
மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் /சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.