தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!

Published : Aug 23, 2025, 09:39 AM IST

மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கொடைரோடு-சமயநல்லூர் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்.

PREV
17
ரயில் போக்குவரத்து

தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

27
தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள்

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும்.

37
தெற்கு ரயில்வே

இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கொடைரோடு-சமயநல்லூர் இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியாக செல்லும் ரயில்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அதன்படி, ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில்வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.

47
சிறப்பு ரயில் இயக்கம்

அதற்கு பதிலாக, ஒரு சிறப்புக் கட்டண ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரையிலும், ஒரு சிறப்புக்கட்டண ரயில் மதுரையில் இருந்து செங்கோட்டை வரையிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து மேற்கண்ட நாட்களில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

57
செங்கோட்டையில் மயிலாடுதுறை வரை செல்லும் ரயில்

அதேபோல, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

67
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

77
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். அதேபோல் கன்னியாகுமரி-ஹவுரா, மற்றும் கன்னியாகுமரி-ஐதராபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 29, 30-ம் தேதினளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories