வீடு தேடி வரும் பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? தமிழக அரசின் எதிர்பாராத அறிவிப்பு

Published : Mar 08, 2025, 10:05 AM ISTUpdated : Mar 08, 2025, 10:09 AM IST

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு சிறப்பு வரண்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட உள்ளது.

PREV
14
வீடு தேடி வரும் பட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? தமிழக அரசின் எதிர்பாராத அறிவிப்பு

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஏதோ ஒரு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவர்களுக்கு பட்டா வழங்கிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பெல்ட் பகுதிகள் உட்பட ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரண்முறைப்படுத்தும் திட்டத்தில் பட்டா வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 

24
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலம்

அதில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்கள் , இதர மாநகரட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்டதாக அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதர மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்  அதை அடுத்த 16 அல்லது 8 கி.மீட்டர் சுற்றளவுக்கு ஒரு முறை சிறப்பு வரண்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

34
எத்தனை வருடம் வசித்தால் பட்டா.?

மேலும் சென்னை மற்றும் அதன் பெல்ட் பகுதி தவிர்த்த  இதர மாநகராட்சிகளில் ஆக்கிரமிபபு நிலம் 15சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, இதர நகராட்சிகள், பேரூராட்சிகளில் 25 சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, அந்த நிலம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரண்முறை திட்டத்தை பொறுத்தவரை, ரூ.3 லட்சத்துக்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரண்முறைப்படுத்தி பட்டா  வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அல்லது ஒரு சென்ட் இவற்றில் எது குறைவாக இருந்தாலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

44
பட்டா பெற தகுதி என்ன.?

ஆக்கிரமிப்பு நிலம், குறிப்பிட்ட 2 சென்ட் அல்லது 3 சென்ட் அளவுக்கு அதிகமாக இருந்தால் அந்நிலம் அரசால் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநில அளவில் தலைமைச்செயலர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரண்முறைப்படுத்தும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories