இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! ஒரே ட்வீட் போட்டு ஆளுநரையும், திமுகவையும் சீண்டிய விஜய்!

First Published | Jan 6, 2025, 4:20 PM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

Governor RN Ravi

பரபரப்பான அரசியல் சூழலில் ஆண்டின் முதல்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையோடு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத விதமாக ஆளுநரை உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிக்கப்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு  செய்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. 

Tamil Nadu Legislative Assembly

ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

Tap to resize

TVK vijay

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

Governor

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும். 

இதையும் படிங்க:  எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

CM Stalin

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!