கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கு! அதிரடி காட்டிய ஐகோர்ட்! அடுத்தடுத்து அதிர்ச்சியில் தமிழக அரசு!

Published : Jan 06, 2025, 02:35 PM ISTUpdated : Jan 06, 2025, 02:37 PM IST

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

PREV
15
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கு! அதிரடி காட்டிய ஐகோர்ட்! அடுத்தடுத்து அதிர்ச்சியில் தமிழக அரசு!
Kallakurichi Hooch Tragedy

கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில், 18 பேர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

25
Kallakurichi Case

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர். இதனையடுத்து நீதிபதிகள் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் வைக்க என்ன தேவை என கேள்வி எழுப்பினார். 

35
Chennai High Court

கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர். மேலும் மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. தவறிழைக்கும் மதுவிலக்கு காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றனர். 

45
Tamilnadu Government

இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர்: இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கு, கல்வராயன் மலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.   60க்கும் மேற்பட்டோர் மரணம் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் என தெரிவித்தார். இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் அனைவரின் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

55
CBI

இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories