நிரந்தரமாக மூடப்பட்ட பிரபல உதயம் தியேட்டர்! வாங்கியது யார்? அங்கு என்ன வரப்போகிறது தெரியுமா?

First Published | Dec 31, 2024, 12:46 PM IST

Chennai Udhayam Theatre: சென்னையின் பிரபல திரையரங்கான உதயம் தியேட்டர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டது. OTT தளங்களின் வளர்ச்சி மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் மோகம் போன்ற காரணங்களால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு காரணம். 

Chennai Udhayam Theatre

சென்னையில் இயங்கி வந்த புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்று தான் உதயம் தியேட்டர். அசோக் நகரில் உள்ள இந்த தியேட்டரில் உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு ஸ்கிரீன்களுடன் கொண்டது. இந்த தியேட்டர் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 41 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 

Udhayam Theatre

எப்போது போட்டா போட்டிக்கொண்டு ஓடிடி தளங்கள் வந்தோ அன்று முதல் தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வருகை மிகவும் குறைந்தது. அதுவும் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படம் என்றால் ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் இருக்கும். அடுத்த சில நாட்களில் தியேட்டர்களில் ஆளில்லாம் காற்று வாங்கும் சூழல் தான் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக பழமையான தியேட்டர்களுக்கு செல்வதை விட மக்கள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்லவே அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கிடைக்குமா? கிடைக்காதா? வெளியான தகவல்!

Tap to resize

Udhayam Cinemas

இந்நிலையில் சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்யாமல் அப்படியே திரையிட்டு வந்தனர். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்தது. இதன் காரணமாக வேறுவழியில்லாமல் அந்த தியேட்டர் உரிமையாளர் அதை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

Casagrand

 அதன் படி திரையங்கு நிரந்தரமாக மூடப்பட்டதாகவும் இந்த இடத்தை பிரபல முன்னணி நிறுவனமாக காசாகிராண்ட் வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் ஏழரையை கூட்டப்போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!

Chennai Udhayam theatre shuts

இந்த இடத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக பரப்பளவுள்ள அடுக்குமாடி அலுவலக வளாகங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளதால், காசா கிராண்ட் நிறுவனம் வணிக வளாகங்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சமீபகாலமாக தியேட்டர்கள் இடிக்கப்படுவது தொடர்கதை இருந்து வருகிறது. அண்மையில் அபிராமி, சாந்தி, ஜெயந்தி, ஸ்ரீனிவாசா, ஆனந்த் உள்ளிட்ட தியேட்டர்கள் மூடப்பட்டு அங்கு குடியிருப்பு, வணிக வளாகம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அந்த வரிசையில் தற்போது உதயம் தியேட்டரும் இணைந்துள்ளது. 

Latest Videos

click me!