சிறுபிள்ளைத்தனமா இருக்கு.! ஆளுநர் ரவியை போட்டுத்தாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

First Published | Jan 6, 2025, 2:38 PM IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறிய ஆளுநர் ரவி. தேசிய கீதம் இசைக்கப்படாததால் இந்த நடவடிக்கை என ஆளுநர் மாளிகை விளக்கம். ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.

Governor ravi

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலகம் வந்த ஆளுநர் ரவியை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு புத்தகம் கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சட்டப்பேரவைக்குள்ஆளுநர் ரவி உள்ளே வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி புறப்பட்டார். 

tamilnadu assembly

ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது.  தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும்.

 இன்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்த போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.  அவையில்  தேசிய கீதத்தைப் இசைக்கப்பட வேண்டும் என பேரவைத் தலைவர் மற்றும்  முதலமைச்சர் அவர்களுக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 
 

Tap to resize

governor ravi walk out

பிரதமருக்கு டேக் செய்த ஆளுநர்

ஆனால், ஆளுநரின் கோரிக்கை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.  இது மிகவும் கவலைக்குரியது எனவும், அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, கவர்னர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த பதிவு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோரை  tag செய்து பதிவிடப்பட்டது. 

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி,  

mk stalin and governor ravi

சிறுபிள்ளைத்தனமானது

கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். 

Latest Videos

click me!