தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் துணை வேந்தர் மாநாடு நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் துணை வேந்தர்களை மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
Governor RN Ravi Vice-Chancellors Conference : தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது, அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவது, தமிழக சட்டப்பேரவையில் உரையை நிகழ்த்தாமர் புறக்கணிப்பது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை கிடப்பில் போடுவது என அடுத்தடுத்து பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக ஆளுங்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எனவே ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
24
Vice-Chancellors Conference
ஆளுநர் ரவி - தமிழக அரசு மோதல்
இந்த வழக்கில் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்ட 10 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் வேந்தர் எனவும் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
34
Vice-Chancellors Conference
துணைவேந்தர்கள் மாநாடு
அதன்படி சிறப்பு விருந்தினராக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் ரவி எப்படி துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டலாம் என கேள்வி எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் துணை வேந்தர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை முற்றாக துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகிறது.
44
MK Stalin RN Ravi
உச்சக்கட்ட மோதல்
ஆனால் இதற்கு ஆளுநர் மாளிகை கொடுத்துள்ள விளக்கத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஆளுநர் ரவி துணை வேந்தர்களை புதிதாக நியமிக்க மட்டுமே முடியாது. இருந்த போதும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ரவியே தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கும்- ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.