Published : Apr 20, 2025, 04:46 PM ISTUpdated : Apr 20, 2025, 04:53 PM IST
மதிமுகவில் துரை வைகோ - மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தயார் எனத் தெரிவித்தார்.
Mallai Sathya Vs Durai Vaiko Clash: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
25
Durai Vaiko
கட்சியில் இருந்து விலகுவதாக துரை வைகோ
அதில் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் நீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் 'என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் துரை வைகோவின் ராஜினாமா முடிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கவில்லை.
இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், முதன்மைச் செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.
45
Mallai Sathya
தன்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள்
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என முதன் முதலில் விரும்பியது நான்தான். எந்த இடத்திலும் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள் என தெரிவித்திரந்தார். இதனையடுத்து தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை துரை வைகோ வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியானது.