சார்..! நான் உங்க ஸ்டுடென்ட் சார்! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு ஆப்பு!

Published : Oct 27, 2025, 02:30 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாஸ்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியை விஜயாவும் கைது.

PREV
14
பாலியல் சீண்டல்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளியில் 6 மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24
அரசு நடுநிலைப்பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வரும் பாஸ்கர் (53) அங்கு படிக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் தொடுவது மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

34
நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர்

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயாவிடம் சென்று இந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டனர். ஆனால் தலைமை ஆசிரியை விஜயா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

44
ஆசிரியர் போக்சோவில் கைது

இதனால் விரக்தி அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் ஆசிரியர் பாஸ்கர் 5-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் பாஸ்கரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி கல்வித்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தலைமையாசிரியை விஜயாவும் கைது செய்யப்பட்டார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பாஸ்கர் விசாரணைக்கு பிறகு இடைநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories