இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது. கடலூர், திண்டிவனம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த கட்சி வலுவலாக உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் வேல்முருகன், நான் சட்டமன்றத்தில் பேசும் பேச்சுகளில் வெறும் 5 நிமிடம் மட்டுமே ஒளிபரப்பு செய்யுறாங்க,
இதற்கு கூட இந்த அரசு பயப்படுகிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாரும் பதிலளிக்க முடியவில்லை.கடந்த 5 ஆண்டுகளில் நான் சட்டமன்றத்தில் பேசியதையும் சாதித்ததையும் மக்களிடம் எடுத்துச் சென்றாலே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் எனவும் தெரிவித்தார்.
சிறிய கட்சியாக தொடங்கிய எங்கள் கட்சி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் போட்டியிடும் இடங்களும் அதிகரிக்கும். தமிழக சட்டமன்றத்தில் தமிழீழ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.