Seeman: கோவை விமான நிலையத்தில் பேசிய சீமான், நெல்லை வீதியில் விட்டுவிட்டு டாஸ்மாக் சரக்கை பாதுகாக்கும் அரசை கடுமையாக சாடினார். ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளித்தால் தமிழகம் இந்தி மாநிலமாக மாறும்.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: நமது அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை பாதுகாக்க பெரிய, பெரிய கிடங்குகளை அமைத்து கண்காணித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது. தார்ப்பாய்க்கு 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்த அரசு, சமாதிக்கு எத்தனை கோடி செலவு செய்தது என தெரியவில்லை. தெருவில் போட்டு நெல்லை முளைக்கு வைப்பது தான் சாதனை. அரசுக்கு மக்களின் நலனை பற்றி கவலை எங்கு..? இருக்கிறது.
24
ஒருநாள் பட்டினி கிடந்து சாகும் போது தெரியும்
தமிழகத்தில் விளைவித்த நெல்லை விட்டு விட்டு ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி, வெல்லம் வாங்குகின்றனர். 2,000 கோடிக்கு பாலம், மெட்ரோ ரயில், விமான நிலையம் எல்லாம் கேட்டோமா? ஒருநாள் பட்டினி கிடந்து சாகும் போது தெரியும். கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி காலத்தில் சேமிப்பு கிடங்கு கட்டியிருந்தால் நெல் வீதியில் கிடைக்குமா? இந்த ஆண்டு மட்டும் இது நடக்கவில்லை, ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நடக்கிறது.
34
வானதி சீனிவாசன்
வாக்களர் திருத்த பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை நான் வரவேற்கிறேன். அதேசமயம் ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள், அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்துவிட்டால், தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும். கோவை தெற்கில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற 20 ஆயிரம் வாக்குகள் வட இந்தியர்களின் வாக்குகள் தான்.
திமுகவிடம் இருந்து தான் நாம் நாட்டை காக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசு மட்டும் ஒரு மசோதாவை சரியாக கொண்டு வருகிறதா? ஊழல் லஞ்சம் ஒளிந்து இருந்தால் எதற்காக ஈ.டி, ஐ.டி ரெய்டு. தீவிரவாத்ததை ஒழித்து விட்டோம் என்கிறார்கள் அப்போது எதற்காக பகல்ஹாமில் தாக்குதல் நடந்தது. அப்போது எங்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டீர்கள். இதற்காக நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். விஜய் சந்திப்பது அவருடைய விருப்பம். நான் அதைப் பற்றி பேசுவதை வெறுக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் பொழுது அரசு அதற்கு பொறுப்பேற்றதா? அல்லது இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதா? அரசு வேலை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதா? ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றார்.