குகேஷுக்கு ரூ.5 கோடி.. கார்த்திகாவுக்கு வெறும் ரூ.25 லட்சம்.. இது தான் சமூக நீதியானு கேட்ட விமர்சகர்கள் - திமுக பரபரப்பு விளக்கம்

Published : Oct 27, 2025, 07:56 AM IST

செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை, கார்த்திகாவுக்கு மட்டும் ரூ.25 லட்சமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
13
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பாகுபாடு..?

ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய கபடி அணியின் துணைகேப்டன் கார்கத்திகாவுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பேசுபொருளாகி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், “குகேஷுக்கு ரூ. 5 கோடி ஆனால் கார்த்திகாவுக்கு வெறும் ரூ.25 லட்சமா?

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்/பரிசு வெல்பவர்கள், போலவே ஆசிய அளவில், தேசிய அளவில், மாநில அளவில் வெல்பவர்கள் என்று முறையே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.

23
குகேஷ்க்கு ரூ.5 கோடி

அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ. 3 கோடி என்றும், உலக சாம்பியன்ஷிப் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது) போட்டியில் வென்றால் ரூ. 1 கோடி என்றும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன.

குகேஷ் வென்றது செஸ் உலக சாம்பியன்ஷிப் (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது) - அவருக்கு அரசாணையின் அடிப்படையில் ரூ. 75 லட்சம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ. 5 கோடி அளிக்கப்பட்டது, பரிசுத் தொகையாக! குகேஷ் தான் உலகின் இளம் செஸ் சாம்பியன்! 17 வயதில் வென்றிருந்தார். இதுவும் ஒரு முக்கியமான காரணம் அவ்வளவு பெரிய பரிசுத் தொகைக்கு!

33
கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்..

கார்த்திகா பங்குபெற்றது Asian Youth Games! (நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது). இதற்கு தமிழ்நாடு அரசாணையின் படி தங்கம் வென்றால் ரூ. 15 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தற்போது கார்த்திகாவிற்கு ரூ. 25 இலட்சம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கார்த்திகாவுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அடுத்தகட்ட பயிற்சிகளுக்கு உதவும், அவரை இந்திய சீனியர் கபடி அணிக்காக விளையாட தேவையானவற்றைச் செய்யும்.

இந்த இரண்டு வீரர்களும் அவரவர் துறைகளில் பல வெற்றிகளைக் குவிக்கவிருக்கின்றனர். வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை ஒப்பிடுவதே தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories