School College Holiday: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 8ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 6 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருச்செந்தூர் கடற்கரையில் முருகப் பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இதனை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
24
சூரசம்ஹாரம்
இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கல்யாணம் வைபவம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூர சம்ஹார நிகழ்வை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
34
உள்ளூர் விடுமுறை
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்குப் ஈடு செய்யும் விதமாக நவம்பர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.