Old Pension Scheme திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு நான்கரை ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
24
DMK
இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நிதி நிலைமையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
34
Government Employee
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தன் உணர்வுடன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், இன்று அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் அரசு ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், இன்று அரசு ஊழியர்கள் மாஸ் விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கும் நிலையில், இன்று அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். அரசு ஊழியர்களின் வருகை, முன்கூட்டியே விடுமுறை எடுத்துள்ளவர்களின் விவரம், இன்று விடுமுறை எடுப்பவர்கள் விவரம் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து கூடுதல் செயலாளர்களுக்கும், முதன்மை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.