உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சந்திப்பு மிகவும் இயல்பானது, அதனை பெரிது படுத்த வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செய்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது மிகவும் சாதாரணமானது. அதனை பெரிது படுத்த தேவையில்லை. மேலும் அவர்களின் சந்திப்பு தொடர்பாக எனக்கு முழுயைாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த பின்னர் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
24
அதிமுக.வை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை
செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பால் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி எப்பொழுதும் போல இயல்பாகத் தான் இருக்கிறது. அதிமுக.வை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற அவசியம் பாரிதிய ஜனதா கட்சிக்கு கிடையாது. அதிமுக தற்போதும் பலமாக தான் இருக்கிறது. எங்கள் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் சொல்வது தான் இறுதியான முடிவு. கூட்டணிக்குள் மீண்டும் வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என இருவரிடமும் பேசத் தயாராக இருக்கிறேன்.
34
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை
பாஜக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுக்கு செல்லும் என்று துணைமுதல்வர் உதயநிதி சொல்கிறார். 2026 தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி ஐசியுக்கு செல்லும் என்பதை அனைவரும் பார்ப்பார்கள். நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செய்திகள் பரவுகின்றன. நான் ஏன் பதவி விலக வேண்டும்? நட்டாவும், அமித் ஷாவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது. இனி இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
திமுக வலுவாக இருக்கிறது என்றோ, அவர்கள் 40 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருப்பதாகவோ அண்ணாமலை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற கருத்துகளை திமுக.வினர் பரப்பி வருவதாக தான் குறிப்பிட்டார். ஆனால் அதனை சிலர் திரித்து கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.