தமிழக அரசு மகளிர் மற்றும் பிற பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் முக்கியமாக பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழுக்கடன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடன் உதவியை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.