பிரிவுக்கு ஜி.கே. மணி காரணம் அல்ல..! ராமதாசை யாரும் ஆட்டுவிக்க முடியாது.. உண்மையை உடைக்கும் மகள் காந்தி

Published : Nov 29, 2025, 07:37 AM IST

பாஜக கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. பாமக தனக்கே சொந்தம் என இருவரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், அன்புமணி தரப்புக்கு சாதகமாக ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. 

PREV
15

மக்களவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பத்துக்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி அமைத்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முதலில் உருவானது. அதேபோல் பாமக இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தனை தன்னிச்சையாக ராமதாஸ் நியமனம் செய்ததால் பாமக பொதுக்குழு மேடையிலேயே மைக்கை தூக்கி போட்டு அன்புமணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் ராமதாஸ் அன்புமணி இடையேயான மோதல் உச்சம் பெற்றது.

25

இதைதொடர்ந்து மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். பின்னர் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, செயல் தலைவராக இருப்பார் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த ராமதாஸ், அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்கிறேன் என்றார். இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அன்புமணி, என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை, பொதுக்குழு மூலமாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.

35

அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து பாமக இரண்டாக உடைந்தது. அதாவது ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியுமாக பாமக செயல்பட்டு வந்தது. இதனால் பாமக யாருக்கும் என்ற போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து இருவரும் பாமக தனக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

45

இரு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் பாமகவை அன்புமணி தரப்பே உரிமை கொண்டாட முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாமகவில் நடைபெறும் அப்பா மகன் மோதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில் அதனை ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

55

இதுதொடர்பாக ராமதாஸ் அணியில் செயல் தலைவராக செயல்பட்டு வரும் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி பிரபல தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்: ஜி.கே.மணியால் தான் குடும்பம் பிரிந்தது என்பது தவறான ஒன்று. இருவரையும் ஒன்று சேர்க்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். கண்டிப்பாக சொல்கிறேன் ஜி.கே.மணி மீது எந்த தவறும் இல்லை. அவரை பிடிக்காத சிலர் இதுபோன்று கூறி வருகின்றனர்.

அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் பொறுத்த வரையில் யார் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார். தான் எடுப்பது தான் முடிவு என்பதில் உறுதியாக இருப்பார். அவரை யாராலும் முடிவு எடுக்க வைக்க முடியாது என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories