பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு லிஸ்ட் இதோ!

Published : Nov 28, 2025, 07:17 PM IST

டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுரை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
13
தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

டிட்வா புயல் 30ம் தேதி அதிகாலை சென்னையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யகூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் தாக்கம் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (29ம் தேதி சனிக்கிழமை) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் உத்தரவை மீறி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

33
நாகை, விழுப்புரம்

இதேபோல் நாகப்பட்டினம் மாவடத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாகை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் நாளை நடைபெற‌ இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories