உயர் கல்வி பயலும் திருநங்கைகளுக்கு குட்நியூஸ்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Published : Jun 30, 2025, 12:46 PM IST

தமிழ்நாடு அரசு திருநங்கைகள் மற்றும் திருநம்பியருக்கு உயர்கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஏற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கும்.

PREV
14
திருநங்கைகள் மற்றும் திருநம்பியர்

திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வை தற்போது மாறி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னேறி வருகின்றனர். கல்வியின் உதவியால் சமூகத்தில் சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர், சுயதொழில் செய்கின்றனர், வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர். இந்நிலையில் உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள் மற்றும் திருநம்பியருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் முழுமையாக ஏற்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2024 மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட அரசாணை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

24
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை/திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
தமிழ்ப் புதல்வன் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பயனடைய திருநங்ககைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர் கல்வி பயிலும் போது அவர்களும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலுமாக தளர்வு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.

44
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயனபெற விரும்பும் திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றாக சமர்ப்பித்து, வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories