இதனிடையே ரிதன்யா விஷ மாத்திரையை உட்கொள்வதற்கு முன்பாக தனது தந்தையின் வாட்ஸ் அஃப் எண்ணிற்கு உருக்கமாக ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் என்னோட முடிவுக்கு என்னுடைய திருமண வாழ்க்கைத்தான் காரணம். என் கணவரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை அனுபவிச்சுட்டே. போதும் இந்த லைஃப் எனக்கு வேணாம். அவங்க மாறமாட்டாங்க. என்னோட இந்த முடிவிற்கு கவின், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி தான் காரணம். என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க அம்மா. என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனையடுத்து கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருமணம் ஆகி 78 நாட்களிலேயே புதுப்பெண் உயிரிழந்ததை அடுத்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.