திமுகவில் இணையும் முடிவில் பல்டி அடித்த குன்னம் ராமச்சந்திரன்... அரசியலை விட்டே விலகுவதாக அறிவிப்பு

Published : Jan 22, 2026, 11:17 AM IST

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தைத் தொடர்ந்து தாமும் திமுகவில் இணையப்போவதாக அறிவித்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலை விட்டே விலகுவதாக தெரிவித்துள்ளார்.

PREV
14
அரசியலை விட்டே விலகிய குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் உறுப்பினரான குன்னம் ராமச்சந்திரன் அதிமுகவில் அணிகள் பிரிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தார்.

24
திமுகவில் வைத்திலிங்கம்

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியுமான வைத்திலிங்கம் புதன் கிழமை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். மேலும் தஞ்சையில் இணைப்புவிழா வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.

34
26ல் இணைப்பு விழா

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன், வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள இணைப்பு விழாவில் தாம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைப்போவதாக அறிவித்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் தாமதம் காட்டுவதால் திமுகவில் இணையப்போவதாக தெரிவித்தார்.

44
அரசியலை விட்டே விலகுகிறேன்..

இந்த நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், “திமுகவில் இணையப்போவதாக அறிவித்த எனது முடிவை மாற்றியுள்ளேன். எனது உடல்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் காரணமாக அரசியல் பொதுவாழ்வில் இருந்தே விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். நான் எந்த கட்சியிலும் சேரும் என்னமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories