தமிழகத்தில் அரையாண்டு மற்றும் பொங்கல் தொடர் விடுமுறைகளைத் தொடர்ந்து, ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு வார விடுமுறைகளுடன் சேர்த்து மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் குஷியில் துள்ளிக்குதிப்பார்கள். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இருந்து வந்தனர். இதில், கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறைகள் அடங்கும்.
25
பொங்கல் பண்டிகை
பின்னர் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்து எப்போது தொடர் விடுமுறை கிடைக்கும் என பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
35
5 நாட்கள் தொடர் விடுமுறை
ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி, ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள், ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதனால் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் சொந்த பந்தங்களுடன் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாடினர். இதனையடுத்து மீண்டும் எப்போது தொடர் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஹேப்பியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.
55
குடியரசு தினம்
அதாவது ஜனவரி 26ம் தேதி திங்கள் கிழமை குடியரசு தினம் விடுமுறை வருகிறது. இதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு 24, 25ம் தேதி வார விடுமுறை வருவதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.