தடல் புடல் விருந்து..
இதனிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தடல் புடல் விருந்து வைக்கிறார். சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதே போன்று அதிமுக மூத்த நிர்வாகிகளான வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
விருந்து நிகழ்வைத் தொடர்ந்து பழனிசாமி, பியூஸ் கோயல் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.