ஓபிஎஸ் கூடாரத்தை மொத்தமாக வாரி சுருட்டிய திமுக.. இன்று திமுகவில் ஐக்கியமாகும் வைத்திலிங்கம்

Published : Jan 21, 2026, 07:11 AM IST

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இன்று திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

PREV
13
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு கூட்டணியை வலுப்படுத்துதல், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல், தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்குதல், பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

23
திமுகவில் வைத்திலிங்கம்

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி சலசலப்பை உருவாக்கி உள்ளது. ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்திலிங்கம் இன்று காலை தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே கையோடு இன்றே திமுகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

33
காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்..

வைத்திலிங்கத்துடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இன்றைய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories